பிப்ரவரி
சிகரத்தைத் தொடு
தமிழ்மொழி நிலைய (12 நிலையங்கள்) மாணவர்களுக்காக (3HTL & 4 Exp/ 5NA) 'சிகரத்தைத் தொடு' என்ற சிறப்பு நிகழ்வுக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு இதற்கு நிதியாதரவு வழங்கியது. 240 நிலைய மாணவர்கள் பங்குபெறார்கள். 6 நிலைய ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை வழிநடத்தினார்கள்.
பெற்றோருக்கான பயிலரங்கு
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு, உயர்நிலை 1முதல் தொடக்கக் கல்லூரிவரை படித்துக்கொண்டிருக்கும் பதின்மவயதினரின் (13முதல் 18வயதுவரை உள்ளவர்கள்) பெற்றோர்களுக்காக ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது.பதின்மவயதுப் பிள்ளைகளின் வாழ்வில், பெற்றோர்களின் முக்கியக் கடமைகள்/பங்களிப்புகள்பற்றிப் பயிற்றுவிப்பாளர்கள் எடுத்துரைத்தனர். மேலும், தமிழ் இலக்கியங்களில் பெற்றோர்கள்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளையும் பயிற்றுவிப்பாளர் சிறந்த முறையில் எடுத்துரைத்தார்.