ஜூலை
"ஆஹா! இன்பமான கற்றல் பயணம்"
7 பிப்ரவரி - 18 ஜூலை 2018
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம்
- ரிவர் சஃபாரிக்குக் கற்றல் பயணத்தை மேற்கொள்ளப் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தல்
- படித்தலுக்குத் துணைப் பயிற்றுகருவிகளைப் பயன்படுத்திச் சிறுவர்களைத் தமிழ்மொழி கற்றலில் ஈடுபடுத்துதல்
- பாலர் பள்ளிக்குச் செல்லும் தங்களது பிள்ளைகளுடன் தமிழ்மொழியில் உரையாடும் இன்பமான வாய்ப்புகளைப் பெற்றோருக்கு வழங்குதல்
கம்பன் விழா
21 ஜூலை 2018
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
- நாட்டியம், நாடகம், பட்டிமன்றம், புதிர்ப் போட்டி, சிறப்புரை போன்ற பல்சுவை அங்கங்களின்மூலம் பள்ளி மாணவர்களுக்குக் கம்பரின் கவிநயத்தை அனுபவிக்கும் மதித்துப்போற்றும் வாய்ப்புகளை வழங்குதல்